மாற்றுத்திறனாளிகளுக்கான மாகாண ரீதியான கொள்கைகள் உருவாக்கப்பட வேண்டும் பாராளுமன்ற உறுப்பினர் M. A சுமந்திரனிடம் DATA வலியுறுத்தல்

பாராளுமன்ற உறுப்பினர், சட்டத்தரணி M.A.சுமந்திரன் அவர்களுடன் தமிழ் மாற்று திறனாளிகள் அண்மையில் சந்திப்பு ஒன்றை நிகழ்த்தினர். அந்த சந்திப்பில் மாற்றுதிறனாளிகள் தொடர்பான பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டன அந்தவகையில்,

  • பாதிக்கப்பட்ட சமூகம் தொடர்பாக தொடர்ச்சியாக பேசப்படுதல்.
  • பாதிக்கப்பட்ட சமூகத்தின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படுதல்.
  • மாற்றுத்திறனாளிகளின் தரவுகள் சரியான முறையில் தொகுக்கப்படுதல்.
  • மாகாணக் கொள்கை உருவாக்கல்.
  • பாராளுமன்றத்தில் இவ் விடயம் பேசப்படுதல் தொடர்பாக ஆராயப்பட்டன.

போன்ற முக்கியமான நான்கு கோரிக்கைகளை DATA அமைப்பு சார்பாக முன்வைத்திருந்தனர்.

மாற்றுத்திறனாளிகளுக்கான அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்யக்கூடிய வகையில் தேசிய கொள்கையினை தழுவியதாக மாகாண கொள்கை ஒன்று வகுக்கப்படல் வேண்டும்.

உழைக்கும் மாற்றுத்திறனாளிகள்இ உழைக்கும் பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கான வட்டியில்லா கடன் அல்லது அவர்களது தொழிலை விருத்தி செய்யக்கூடிய நிதி மூலதனத்தை அரசிடமிருந்து பெற்றுக்கொடுத்தல். மாற்றுத்திறனாளிகளுக்கான காப்பகம் ஒன்றை பிரமாண்ட காப்பகமாக வடமாகாணத்தில் அமைத்தல்.

அது மாற்றுத்திறனாளிகளின் வகைப்படுத்தல்களை மையப்படுத்தி அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்யக்கூடிய அளவில் இருத்தல். முற்றாக உழைக்கும் வலுவற்று பூரணமாக மற்றவர்களில் தங்கி வாழ்பவர்களுக்கான அவர்களின் தேவைகளுக்கு ஏற்றவாறு கொடுப்பனவுகளை வடிவமைத்தல்.

கொள்கை உருவாக்கம் செய்யப்பட வேண்டும், விசேட நிதி ஒதுக்கீடுகள் கொண்டு வருதல் போன்ற விடயங்கள் கலந்துரையாடப்பட்டது. இதனைவிட எதிர்காலத்தில் மாற்றுத் திறனாளிகள் தொடர்பான அக்கறையும் அவர்கள்தொடர்பான அபிவிருத்தி பற்றியும் கலந்துரையாடியுள்ளனர்.